பார்வை உனது...!

பூக்களிலுள்ள பனித்துளி கூட
சூரியன் பட்டதும் ஜொலிக்க...!
நீ என் மனதில் வந்ததும்
என்னவோ வலிக்க...!
வான் மேகம் போல் அது
என் நெஞ்சிலே இடிக்க...!
காற்றிலே என் மனம்
பஞ்சாய் வெடிக்க...!
தங்காமல் தங்குகிறது
என் மனது...!
அதை தாங்க தேவையான
பார்வை உனது...!