வளர் பிறை-22

ரவி ரகுவாக மாறிவிட்டான்,,,,,,, அவன் வீட்டிற்கு சென்றான்,,,,,,, எத்தனை நாளானது அந்த வீட்டிற்க்குள் இவன் சென்று,,,,,,, அந்த வீட்டிலிருந்த கடைசி நாள்,,,,,,அவன் கண் முன்னே

ரவி ரகு இருவரும் இரட்டையர்கள்,,,,,,,, ஆனாலும் ரவி ரகுவை விட அரை மணிநேரம் மூத்தவன்,,,,,

பொதுவாக இரட்டையர்கள் என்றால் உருவத்திலும், உள்ளத்திலும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் என்பது ஒரு கணிப்பு,,,,,, ஆனால் அதை பொய் ஆக்கினான் ரவி

ரவிக்கு அன்னையின் அன்பு பிடிக்கும் தந்தையின் கண்டிப்பு பிடிக்காது,,,,,,, ரவியும் ரகுவும் ஒரே வகுப்பு,, ஒரே நிற சட்டை, ஒரே மாதிரியான பொருட்கள் என்றிருந்தாலும் மனத்தாலும் குணத்தாலும் இரு துருவங்கள் தான்

அவர்களின் பதின்ம கால மாற்றமும் அவர்களின் இடைவெளியை அதிகப்படுத்தியது,,,,,,,,


ரவிக்கு அவனது பதின்ம வயதில் புகை, அதன் பின் மது,,,, என்ற பழக்கங்கள் படைஎடுத்துவர

ரகு ஒரு அமைதியான ராமனாக வளர்ந்து வந்தான்,,,, அண்ணனை திருத்துவதாக நினைத்து சில சமயங்களில் அண்ணனின் செய்கையை அப்பாவிடம் சொல்ல ரகு மீது ரவிக்கு கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியது,,,,,,,

ஆனால் ரகு ரவியை அண்ணனாக மட்டு மின்றி ஒரு நண்பனாகவே பார்த்தான்

இது எல்லாவற்றிக்கும் உட்ச்சமாக,,,,,,, ரகு ரவியின் பனிரெண்டாம் வகுப்பின் கூடா நட்பின் காரணமாக,,,,,,, ஒரு பெண்ணை இழிவு(ஈவ்டீசிங்) செய்த குற்றத்திற்காக சிறை செல்ல நேர்ந்தது

அன்று காலை உணவு அன்னையின் அன்பு கைகளில் உண்டு கொண்டிருந்த ரவியை காவல் துறையினர் வீடு புகுந்து இழுத்து சென்றனர்


அந்த கணமே ரவியை அவன் தந்தை தலை முழுகினார்,,,,,,,,

எல்லாம் நினைவலையில் வந்து முடிந்தது,,,,,, சிறை சென்று வந்தவனை மகன் என்று சொல்லாமல் விரட்டி அடித்தார் தந்தை

இன்று அவன் வாழ்வே மாறி விட்டது,,,,,,,,, அவன் மனம் சொன்னது,

"நான் செஞ்சதெல்லாம் தப்புன்னு உணர்ந்து திருந்தி வந்தேன் என்ன நீங்க ஏத்துக்கல இப்போ அதே சகத்திலே விழுந்துட்டேன்,,,,,,,,,"

பந்த பாசத்தை எல்லாம் வாசலிலே கழட்டி வைத்து விட்டு வீட்டினுள் நுழைந்தான் ரகு(ரவி)

"எங்க பா போன "- அன்போடு கேட்டார் அப்பா

அவரை ஒரு பார்வை பார்த்தான்,,,, "இந்த பாசம் என் மேல மட்டும் இல்லைல"- அவன் மனம் கேட்டது

"வேல விஷயமா வெளிய போயிருந்தேன்"

"சரி சாப்ட்டியாப்பா"

அவன் மனம் கொழுந்துவிட்டு எரிந்தது,,,, "அடடா ஆசை மகன் மீது எவ்வளவு கரிசனம்"


"ம்ம்ம் சாப்டேன்" - சொல்லிவிட்டு மாடிக்கு சென்றான்

அவன் தந்தை அப்படியே நின்றார்,,,,,,,,,,

"என்னாச்சு இன்னைக்கு இவனுக்கு"


மடியில் ரகுவின் அறையில் ரவி,,,,,,,, மன புகைச்சலுடன்,,,,,,,,, ரகுவின் மீது ரவியின் கோபம் அதிகமானது


இருப்பினும் அதற்க்கு இது தருணமல்ல முதலில் இந்த கொலை விவகாரத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்ன செய்யலாம்

பலவாறாக சிந்தித்து கொண்டிருந்தான் ரகுவாகிய ரவி

அவனுக்கு ஒரு யோசனை வந்தது,,,,,,,,,,,,,


"கரெக்ட் இது தான் சரி",,,,,,,,,,,,,, முடிவெடுத்தான்


பரபரப்பாக தன் திட்டத்தை செயல் படுத்த தொடங்கினான்

(வளரும்,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (21-Dec-13, 4:12 pm)
பார்வை : 145

மேலே