நிலா நேசி

இன்றும் மின் தடை ...
சன்னல் திறந்தேன்
தெளிவான வானம் - அதில்
வீசிஎறிந்த விண்மீன்கள் -
வெளிச்சப் புள்ளிகள் ..!
செவியோர முடிகோதும்
குளிர் தென்றல் ;
வெட்கிவெட்கி
உள்ளறை யிலிருந்து
தன் மணாளனைப்
பார்க்குமோர் புது
மணப்பெண் போலும்
முகில் மறைவிலிருந்து
முகம் காட்டியது ...
கம்பியினிடை
வெள்ளி நிலா
இரும்பின் தவம்
எத்தனை ஜென்மமோ
சன்னல் கம்பியாய்
ரசித்துக் கிடக்க..!