நீ தூக்கி எறிந்த இதயம் நேசிக்கும் அவள் இதயம் 555
உயிரே...
உன்னையே
நேசித்த என்னை...
அன்று தொலைத்தாய்...
இன்று தேடுகிறேன்
என்கிறாய்...
என் நினைவெல்லாம்
நீதான் என்று வாழ்ந்தேன்...
உன் நினைவில் நான்
இல்லை என்றாய்...
என் நினைவே
போதுமென வாழும்...
அவளை சந்தித்தேன்
என்னை இழந்தேன்...
விரும்பாத உனக்காக
துடித்தேன்...
என் சுவாசமே
போதுமென வாழ்கிறாள்...
அவளின்
சுவாசமாக நான்...
நீ தூக்கி எறிந்த
இதயத்தையும்...
உயிராக
நேசிக்கிறாள் அவள்...
அவளை மறுத்துவிட
மனமில்லடி எனக்கு...
நீ தூக்கி
எறிந்த இதயம்...
எரியபட்டதாகவே
இருக்கட்டும்...
துடிக்கும் அவள்
இதயத்திற்காக...
என் இதயம் இனி...
உன்னை போல் தூக்கி
எரிய மனமில்லடி எனக்கு...
உன்னால் முடிந்தால்
என்னவளுக்கு தோழியாக பழகு...
இல்லையேல் வேண்டாம்
இனி சந்திப்பு.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
