கல்கியில் வெளியாகியுள்ள என் கவிதைகள்

காதல் மழை !
------------------
மழை பற்றிய கவிதைகள் எனக்குப் பிடிக்கும்
இப்போதெல்லாம் மழையைக் கூடப் பிடிப்பதில்லை
நீ நனைந்து வருகையிலெல்லாம்.
நீ மறந்து விட்டுப் போன குடையோடு சண்டையிட்டே
நீ வரும் வரை என் நேரத்தைக் கழிக்கிறேன்.
எனக்கும் உனக்குமான சண்டைகளில்
எப்போதும் வெல்வது
நம் காதலாகத்தான் இருக்கிறது
எப்படி வேண்டுமானாலும் சண்டை இடு!
சமாதானமாய் இன்னும் இன்னும்...
உன் சாரல் முத்தங்களால்
என்னை சஞ்சரிக்க விடு!
-கவிதாயினி சத்யா, மதுரை.
கல்கி