மாணவன் பள்ளியில்

அவன் கையிலோ
பேனா எழுத்துகளை மேய்கிறது..
மனதிலோ
புத்தகம் புரளுகின்றது...
கண் முன்னால் கரும் பலகையோ
மங்களாகி மறைந்துவிடுகின்றது..
உடல் இருப்பதோ ஓர் இடத்தில்
உள்ளம் இருப்பதோ வேறொரு இடத்தில்..
காலையில் நம்மை
எழுப்பும் கடிகார ஒளிப்போல்..
எங்கிருந்தோ
வருகிறது ஒளி..
மீண்டும் எழுத்துகளை மேய்கின்றான்
கோடிட்ட வயலில்...!
-ஹரிகரன்

எழுதியவர் : ஹரிகரன் (22-Dec-13, 1:47 pm)
சேர்த்தது : ஹரிகரன்
Tanglish : maanavan palliyil
பார்வை : 2184

மேலே