"என்னை பார் யோகம் வரும்"
ஊரின் அழுக்குகளை
ஆக்குவேன் வெள்ளை ..! - என்
இடுப்புக்கு வேட்டி மட்டும் ...
சட்டை நான் அணிந்ததில்லை ..!!
பாலுக்கு அழும் பிள்ளை
பாதி உயிருடன் மனைவி
வேலைக்கு கஞ்சியில்லை
வீட்டிற்கும் கூரையில்லை
காலையில் தினம் நானும் -என்
கழுதையைத் தான் பார்க்கிறேன்
அந்த "யோகக்" கழுதை மட்டும்
எனக்கேன் வருவதில்லை ..?