மாலை நேரத்து மயக்கம்2

" ஒரமா தான் டி "
" முடியாது. அமுதாக்கா இதுல அளவா இருக்கனும் சொல்லிருங்கா. முக்கியமா கல்யாணத்திற்கு அப்புறம் தா. அது எல்லாமே "
" யேய் கிஸ் தானே கேட்டேன் "
" அதுவும் தா "
"அமுதாக்கா அப்படி சொல்லிருக்க மாட்டாங்க இரு நான் கேட்கறேன் " என போனை எடுத்தேன்.
" டேய் மூடிட்டு இருடா. என்னானு கேட்பா இத பத்தி "
" சரி விடு . மண்டபம் போனா "
" மண்டபம் போன என்ன டா "
" இல்லை மண்டபத்தில என் கூடவே இரு "
" வெயிட் பண்ணுடா. ப்ளீஸ் நான் பார்த்துட்டு சீக்கிரம் வந்தருவேன் "
மெதுவாக நடக்கலனாள்.
" சரி " என்ற படி.
மெதுவாக மண்டபம் வந்து சேர்ந்தோம்.
.
அவளுக்கும் எனக்கும் மண்டபத்தில் நடந்த நிகழ்வுகளான ----ரிசப்ஷன் டேபிளில் அவள் தோழியின் அம்மாவும் அப்பாவும் வரவேற்றார்கள். விமலா சிரித்தாள். எனக்கு எதும் செய்ய தோன்றவில்லை. மண்டபத்தில் அளவான கூட்டம். சல சல வென பேச்சு சப்தம். மணமகள் மேடைக்கு வரததால், அவள் தோழிகள் மணமகள் அறையில் இருப்பதாக யூகிந்து கிளம்பினாள். நான் ஆண்கள் வரிசையில் ஒரு தனித்த இடத்தை பிடித்து அமர்ந்தேன். 20 நிமிடங்கள் பொறுத்தேன். முடியவில்லை . மதியம் அவளுக்கு அனுப்பிய sms போக 40 sms பாக்கி இருந்தது. " என்ன பண்றடி " , " போர் அடிக்குது வாடி ப்ளீஸ் " , "செல்லம் " , " ஐ ஆம் வெயிட்டிங்கு " யென 40 sms களை அனுப்பி காலி செய்தேன். " வெயிட் டா ப்ளீஸ் " ஒரு sms அவளிடமிருந்து வந்தது.
.
மணமகள் மேடைக்கு வந்ததும் , என்னை தேடி வந்தாள்.
" டேய் ஏன் டா சும்மா சும்மா மேசேஜ் அனுப்புறா , ப்ரண்ட்ஸ் ஒட்டாறாங்கா டா "
" என்னானு "
" ஒகே வெயிட் வரேன் " என்றபடி
பெண்கள் வரிசையில் தன் தோழிகளை அமர்ந்திருந்த இடத்தை பார்க்க போனாள்.
.
மணி எட்டை நெருங்கியிருக்கும் , சாப்பிட போகலாம் யென்று அழைத்தாள். அவள் கைகழுவும் இடத்தில் யாரிடமோ பேசினாள். அவள் தோழி என்னோடு பேசினாள் :
" உங்க sms யெல்லாம் படிச்சேன் " என்றாள்.
" ஆமா ரீப்ளியே காணோம். உங்க நெம்பர் கூடுங்கா டிரை பண்றேன் " என்றேன்.
" மொதல்ல அவளை சமாளிக்காங்க . பார்க்கலாம் " என்றாள்
.
பேசிய படி பந்திக்கு போணோம். அவள் தோழிகளுக்கு அடுத்தாக அமர்ந்திருந்தாள். நான் கடைசி , அவளுக்கு அருகில் . அவள் உடைத்து சாப்பிட்ட லட்டின் பாதியை என் இலைக்கு ,என் லட்டை அவள் இலைக்கும் மாற்றினேன். பார்த்து விட்டு ஒரு திணுசாக சிரித்தாள். அபூர்வமாக அவளிடமிருந்து கிடைக்கும் சிரிப்பு. தோழியோடு பேசிக் கொண்டே , மாற்றி வைத்த லட்டை சாப்பிட்டாள். சாப்பிட்ட பின் ஒன்றாக சேர்ந்து கை கழுவ சென்றோம்.
தொடரும் . .
Part-3

எழுதியவர் : m.palani samy (24-Dec-13, 2:26 am)
பார்வை : 217

மேலே