மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ் - கவிதை 3
ஜீசஸ் படைத்த சூரியனே - உன்னை
சிவனின் நெற்றிக்கண் தீபம் என்றேன்...!
தேவன் படைத்த எழில் பிறையே - ரம்சான்
திருநாள் அழகே நீ என்றேன்....!
குரானும் பைபிளும் கீதையுமே திருக்
குறளின் அழகிய குழந்தை என்றேன்.....!
குறைகள் என்றும் நமக்கில்லையே - காரணம்
குழந்தையாய் ஏசுவும் வந்து விட்டாரே...!
பிள்ளை மனதை மனிதனே கொள் - பின்பு
பிரச்சனைகள் வாழ்வினிலே இல்லை என்றே
பின்னும் முன்னும் பிறந்த உயிர்கள்
பின்பற்றி நல்வழி வாழ்வதற்கே - மண்ணில்
பிதாமகன் பிரகாசமாய் தோன்றுகிறாரே....!
குறிப்பு :
மேரி மாதாவையும் குழந்தை ஏசுவையும்தான்
மேலே உள்ள படமாக பதிந்தேன்.......
மறுபடி கவிதையை திறந்து பார்க்கையில் அது...
கோகுலக் கண்ணனாகவும் அவன்
கும்பிடும் யசோதாவாகவும் பதிவாகி விட்டது
எல்லாம் தேவனின் திருவிளையாடல்....
அனைவருக்கும்
அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்....!