புத்தரிசி பொங்கல் - பொங்கலின் பொழுது நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டியது

உழவன் சிந்தும்
கண்ணீர் துளி
ஆனது - புத்தரிசி மணி

புத்தரிசி - வீசும் வாசம்
உழவன் மண்ணில்
கொண்ட நேசம்

காற்றினிலே - அலை ஆடும் (நெல் நாற்று பச்சை அலைகளாய் ஆடும்)
கதிர் சேர
செல்வ - கலை ஆடும்

புத்தரிசி - வீடு சேர்க்கும்
உழவன் புகழ் (தியாகம்)
விண் உயர்த்தும்

நெல் நாற்றும்
வான் நோக்கி
மழை வேண்டி
தவம் நிற்கும்

பச்சை புல்லும்
பால் பிடிக்க
புத்தரிசி - நெல்லாய் மாறும்

மீண்டும் தன்னை
விதைக்க சொல்லி
நெர் கதிரும்
நிலம் (கீழ்) நோக்கும்

உழவு வட்டம்
உயிர் வட்டம்
என்பதையே
சுட்டி காட்டும்

புத்தரிசி - சோறு ஆக்க
உழைக்கணுமே - உடல் வியர்க்க

மழை இன்றி
வான் பொய்க்க
வறட்சியில் தான்
நிலம் வெடிக்க

உழவு நிலை
மனம் தைக்க
நதி சேர்ப்போம்
உயிர் காக்க

புத்தரிசி பொங்கச்சோறு
ஊர் முழுக்க
மணக்கும் பாரு

உழுதவனோ பட்டினியில்
சாகும் நிலை
தந்தது யாரு

விதச்சவனே
விலை வைக்கும்
காலம் போக்கும் – கோளாறு

எழுதியவர் : சண்முகானந்தம் (24-Dec-13, 7:03 am)
பார்வை : 220

மேலே