மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ் - கவிதை 2

பகலையும் இரவையும் படைத்தவரே - நல்லதை
பகுத்தறியும் திறனை அளித்தவரே......!

பாடும் என் கீர்த்தனைகள் இன்னிசையில்
நின் பைபிளின் வாசகங்கள் செந்தமிழில்...!!

பழகிய துளசி தீர்த்தச் சுவை அதை நானும்
உன் தேவாலய புனித தீர்த்தத்தில் கண்டேனே..!

லக்ஷ்மி கடாட்சமே அங்கே கண்டேன்
நின்றெரியும் மெழுகு வர்த்தி சுடர் ஒளியில்

லட்ச லட்சமாய் இன்பமே தோன்றியதே
பரம பிதாவே என் இதயமும் இன்பத்தில் ஊறியதே

உருவங்கள் மாறுபடினும் உலகில் உயிர்களிடம்
உள்ள அன்பு ஒன்றுதானே ?

உண்மையில் அன்னையுருவாய்
உம்மை நான் காண்கிறேனே....!

தாயும் ஆனவேறே நீர்...! ஏசுவே நின்
தாள் பணிந்தே சரணடைய....

அம்மா என்றே அழைக்கும் கன்றாய்
ஆண்டவரே என்றே உம்மை அழைக்கின்றேன்

பதமலர் தாருமையா
பணிந்தும்மை வணங்குகிறேன்.....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (24-Dec-13, 4:27 am)
பார்வை : 95

மேலே