மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ் - கவிதை 1
வானத்தையும் பூமியையும் ஸ்ரிஸ்டித்தவரே - எம்
வாழ்வினிலே மனிதத்தை தாருமையா.....!
கிருஷ்ண ஜெயந்தி அன்று கோபி வைத்தோம்
கிறிஸ்த்துமஸ் அதனால் சிலுவை அணிவோம்....!
பரிசுத்த ஆகமத்தின் வரிகள் போலே - தேவனே
பாசமாய் எம் எண்ணம் உன் மேல் வைத்தோம்....!
பாபாவை வெண் உடையில் யாம் கண்டோம்-அதே
பரிசுத்த ஆடையிலே உன்னைக் கண்டோம் ...!
வள்ளலார் திருநீறும் எங்கே என்றோம் - அது
வஞ்சமில்லா மனித நெஞ்சில் நிறமே என்றோம் ..!
பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே-உமை
பணிந்தோம் நின் மலரடிகளே சரணம் ஐயா...!!