கடவுள் மகன் மனிதனானார்

நல்லிரவின் அமைதியிலே
நாடுறங்கும் வேளையிலே
வல்லவன் மண்ணுலகில்
மானிடராய் அவதரித்தார்

நல்மனத்தோர் அமைதிபெற
நானிலத்தோர் சாந்திபெற
கல்மனத்தோர் கரைந்துருக
கடவுள் மகன் மனிதனானார்

மாற்றத்தை தோற்றுவித்த
மனுமகனை வாழ்த்திடுவோம்
ஏற்றத்தை எமக்களித்த
இறைமகனை வாழ்த்திடுவோம்

நத்தார் புதுவருட
நாயகனை வாழ்த்திடுவோம்
தித்திக்கும் தமிழெடுத்து
தினமும் போற்றிடுவோம்

எழுதியவர் : (24-Dec-13, 2:48 am)
பார்வை : 95

மேலே