சொல்கத்திகள்
குத்தி கிழித்த சொல்கத்திகளால்...
வழியும் குருதியை அவள் வருட...., விரல்களில் பிசுபிசுக்கிறது
அவனின் காலாவதியான கடந்தகால ப்ரியங்கள்...
அணுவில் நுழைந்து அவள் அண்டங்கள் நிறைத்த அதன் வாடை
நாசியில் நுழைகிறது வெறுப்புக் காற்றை வீசியபடியே.
.
பளிங்கு பனியினால் பதமாய்தான் செய்கிறாய்சொல்கத்திகளை..
நேர்த்தியாக அவள் நெஞ்சினில் இறக்கி நிமிட்டி நிமிர்கிறாய்.
அவள் கண்ணீர் வெப்பத்தில் கத்திகள் கரையலாம் ..
அவள் காயங்கள் காக்கும் அதன் தடயங்களை..
"கத்திகள் கரைந்தன....காயங்கள் மறைந்தன".. என
கண்சிமிட்டி சிரிக்கிறாய் .,,
கண்டதுண்டோ சடலங்கள் சிரிப்பதை.??????
இதோ சிரித்துகொண்டு இருக்கிறாள் உன்னுடன் சேர்ந்து ..
உன் சிரிப்பு அதிர்வுகளில் அவள் அழுகையை அடக்கியபடியே......