என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் - 8

நீ எதை வைத்தாலும் விமரிசையாக தான் இருக்கும்
என்கிற உண்மையை உள்ளப்பூர்வமாய்
உணர்ந்து உணர்ந்தேன்
உன் உள் மனதினில் என்னை
உட்குடி வைத்த அக்கணமே!!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

காவியமாய் என் மனதில்
நிலைத்து நிலை நிற்கும்
உயிருள்ள ஓவியமே !
என் மனதினில் உள்ளிருக்கும்
உன் இனி நினைவுகள் உள்ளவரை
கோவத்தின் உச்சமதில்
நச்சினையே உமிழ்ந்தாலும்
நின் இதழ் ஒற்றிய    எச்சத்தின்
மிச்ச சுவையாய் சுவைத்திடுமே !!

$$$¢$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


சொர்கத்தின் வாசற்படி துவங்கி
வாச மலர்களை வழியெங்கும்
வீசி வீசி வணங்கியவாறே
உன் வருகை வேண்டி உன்னை வரவேற்க
உன் வீட்டு வாசலில் வந்து நிற்பான்
"சொர்கத்தின் சொந்தக்காரன் "
பாவம் !
சொர்கத்தின் சுத்தத்தில் களங்கம் கூடிவிட்டதாம் ,நின் நின் சில நாழிகை சுவாசம் கொண்டு
சொர்கத்தை சுத்திகரிக்க !!

எழுதியவர் : (25-Dec-13, 9:14 am)
பார்வை : 124

மேலே