கேவலமே முகமாக

என் நிறத்தை
மட்டுமே பார்த்த
உன் மனது
என் உள்ளத்தை
பார்க்கவில்லை...
உனக்கு பிடிக்காத
என் முகத்தை
அமிலம் ஊற்றி
கழுவி விட்டேன்...
உன் கண்கள்
என் முகத்தை
இனிமேல்
பார்க்க வேண்டாம்
உன் மலர்விழிகள்
பாதுகாத்துக்கொள்.....
என்னை போன்ற
ஈனப்பிறவியாய் பிறந்து
கேவலமே முகமாக கொண்டு
கழிவுகளை நிறமாக கொண்டுள்ள
மனிதர்களை
நீ
பார்க்க வேண்டாம்...
உன் மனதிற்கு
பிடித்த ஒருவன்
உன் துணைவனாக
வரவேண்டும்
என்று
கடவுளிடம் மண்டியிட்டு
கண்ணீர் மல்க
வேண்டுகிறன்...!!

எழுதியவர் : கோபி‬ (25-Dec-13, 5:37 pm)
பார்வை : 194

மேலே