நிலைத்து நீடுழி வாழும்
காதல் புனிதமானது
நின்று நிதானமாக
தங்கு தடை யில்லாமல்
நல்கி நயந்து
கூடி கொண்டாடி
வரும் நேசம்
பாசமாகி பண்பாகி
விரிந்து நெடிதுயர்ந்து
பயணமாக வரும் ஒரு பற்று
காதல் எனக் கொள்வோமாக .
காதல் கொச்சையாகும் நிலை
உடலும் உடல் சார்ந்த போதில்
சிற்றின்பம் பெரிதாகும் நேரம்
இச்சை மிகையாகும் காலம்
இலை மறை காய் மறைவாக
நிற்கும் தோதில் மாறி
வெளிச்சம் காட்டும் வகையில்
வெளியேறும் நிகழ்வு
ஒரு வெறுப்பான வினையை
எதிர் கொள்ளும் நிகழ்ச்சி.
காதல்
புனிதம் தோற்றும் தெய்விகம்
அளிக்கும் சிறப்பு அருமை
தரும் மேலாண்மை பெருமை
சாலப் பொருத்தம் பெறும் வளமை
அன்பின் பரிணாமங்களை
வியந்து போற்றி விரிந்து
அரவணைத்து ஆதரித்து
அழகான நெக்குருகும்
விதமான காதலே
தொடர்ந்து நிற்கும் எப்போதும்,