நான் கொண்ட அன்பை சொல்ல

உன் மீது நான் கொண்ட
அன்பை சொல்ல
தமிழ் எழுத்துக்களை
கோர்த்து கடிதமாக
எழுதத் தெரியவில்லை....

குறுஞ்செய்தியாக
அனுப்பத்தெரியவில்லை....
அவ்வளவு ஏன் ??

மனதில் நினைப்பதை
வார்த்தைகளில்
சொல்லவும் தெரியவில்லை....

மிதக்க தெரியும் மனதிற்கு
வார்த்தைகளை
வடிக்கத் தெரியவில்லை......

நிலைமை இது என்றால்
ஏன் அன்பு கொண்டு
அவஸ்தை படவேண்டும்??

எழுதியவர் : சாந்தி (25-Dec-13, 10:50 pm)
பார்வை : 131

மேலே