என் செய்வேன் நான்

எனக்கு மட்டும்
ஏனோ புரிவதேயில்லை எதுவும் ..
உன்னைத் தவிர !
அதுவும் ஏனெனத்
தெரியவில்லை !
அறிய விருப்பமில்லை!
அதை அறிந்திட
விரும்பவுமில்லை!
எங்கே ஆராய்ந்து
என் அன்பு உன்னில்
அளவற்றுப் போய்விட்டால்
என் செய்வாள் இந்த பேதை !..