தாயின் மடியில்

காலையில் கல்லூரி சென்று
மாலையில் வீடு திருமும் வரை
என் நினைவால் தினமும் வாசலில் காத்திருக்கிறாள்

நான் சோர்ந்து வரும் வேளையில்
அவள் முகம் வாடி கிடக்கும்

வீடு வந்ததும் அன்பாக நலம் விசாரிப்பாள்
அழகாக உணவு பரிமாறுவாள்

அவள் மடியில் ஊஞ்சல் கட்டி
முந்தானையை விசிறியாக மாற்றி
சூவாசத்தை தேன்றலாக்கி
தலைமுடியை கோதி விட்டு
நான் தூக்கிடும் அழகை பார்த்து ரசிதிடுவாள்

மனதோடு இருந்த கவலைகள் எல்லாம்
ஒரு நொடியில் மறந்து போகும்

மரணம் அருகில் வந்தாலும் --அவள்
மடியில் துங்கிட வரம் கேட்கும்

என்றும் என் தேவதையும் அவள் தான்
என்றென்றும் என் காதலிலும் அவள் தான்

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (27-Dec-13, 11:37 am)
Tanglish : thaayin madiyil
பார்வை : 521

மேலே