மனிதன் வாழ்க்கை கானா பாஷையில்
கதை சொல்ல போறேன்
கதை சொல்ல போறேன்
மனுஷன் மண்ணான கதை இதுங்க
மனுஷன் மன்னன் ஆன கதை இதுங்க .
கேளுங்க கேளுங்க நா சொல்லுற தொடர்கதைய கேளுங்க
மனுஷன மனுஷன் பகச்சுக்குறான்..
முன்னாடி போயி நடிச்சுகிறான்...
பின்னாடி வந்து சிரிச்சிகுறான்..
புத்தி உள்ளவன் பிளச்சுக்குறான்..
புத்தி இல்லாதவன் சிக்கிக்குறான்..
மனுஷா மனுஷா உன் வாழ்க்கை
ஒரு திணுசா திணுசா..
கேளுங்க கேளுங்க மீதி கதையும் கேளுங்க
கேட்டுபுட்டு,
உங்க கருத்துக்கள சொல்லுங்க சொல்லுங்க
பட்ட படிப்பையும் படிச்சுக்குறான்.
பட்ட சரக்கையும் அடிச்சிக்குறான்.
வட்டி விட்டு தான் புலச்சுக்குறான்.
வெட்டி நியாயம் தான் பேசிக்குறான்
கட்டில் சுகத்துக்கு அளஞ்சுக்குறான். .
கேளுங்க கேளுங்க இவன் வாழுற வாழ்க்கைய பாருங்க பாருங்க
பார்த்துப்புட்டு
உங்க கருத்துக்கள சொல்லுங்க சொல்லுங்க..
கடவுளையும் துணைக்கு கூப்ட்டுக்குறான்
விதியையும் காரணம் சொல்லிக்குறான்
மதியையும் கேளாம நடந்துக்குறான்
மாத்தி மாத்தியே பேசிக்குறான்
மாற்றம் தேவையுனு புலம்பிக்குறான்.
மானம் போனாலும் சிரிச்சுக்குறான்
மனுஷா மனுஷா உன் வாழ்க்கை
ஒரு திணுசா திணுசா..
கேளுங்க கேளுங்க இவன் வாழுற வாழ்க்கைய பாருங்க பாருங்க
பார்த்துப்புட்டு
உங்க கருத்துக்கள சொல்லுங்க சொல்லுங்க..
கதை சொல்லி முடிச்சேன் -நானும்
கதை சொல்லி முடிச்சேன்
மனுஷன் மண்ணான கதை இதுங்க
மனுஷன் மன்னன் ஆன கதை இதுங்க .