கடக்கட்டும் மெட்டு மலரட்டும் மொட்டு

கடக்கட்டும் மெட்டு மலரட்டும் மொட்டு..

நாளுக்கு நாள் மாற்றமாய்
குரு இடம் பெயர்கிறான்
ராசி பலனும் பிறழ்கிறது
மனிதமனம் மாற மறுக்கிறது...

புது வருடம் ஒளியாய் பிறக்கிறது
பழம் பஞ்சாங்கம் ஒழிய மறுக்கிறது...மனமேடை
பழங் காலத்துப் பலாபலன் தெரிந்தும் நடிக்கிறது
புது வருடத்து ராசிபலன் அறியவும் துடிக்கிறது

எதிர்கால பாதைக்கு
தீட்டும் திட்டம் என்றும் தவறில்லை
புதிர்ராகுகால பூஜைக்கு
நாட்டும் நாட்டம் இன்றும் தவறவில்லை

பழம் வருடத்து புதிர்ராகுகால பூஜை
புது வருடத்து எதிர்கால பாதைக்குப்
பாலமாகி இழப்பற்ற செழுமைவெள்ளம்
பாய்ந்ததா? என எண்ணத் தோன்றவில்லை
பக்குவப்பட்ட மனவானாய் மனிதன்
பகுத்தறிவுத் தேர்வில் தேறவில்லை...

கழிந்தவை யாவும் கழிந்தவையாய்
கசப்பாய் இழப்புகள் தொலைந்தவையாய்
கடுகாய் பாவங்கள் சுருங்கியவையாய்
கடக்கட்டும் கடக்கட்டும் நடப்பாண்டு மெட்டு...

கருத்தாய் ஆக்கம் நிறைந்தவராய்
கற்ற கல்வி வழி நடப்பவராய்
கடமை நடைகண்ணியம் கொண்டவராய்
கட்டுப்பாடு கொடைபுண்ணியம் மதிப்பவராய்
கலங்கா இதயம் கொண்டவராய்
காவலாகா பஞ்சாங்க ராகுராசி பலனை உடைப்பவராய்
காலத்திற்கும் வாழ எண்ணுகவே இக்கணம் தொட்டு
காப்பரணாய் மலரட்டும் புத்தாண்டு மொட்டு...!!

... நாகினி

எழுதியவர் : நாகினி (27-Dec-13, 11:33 am)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 115

மேலே