நீயும் நானும்

எதைக்கண்டாலும்
யாரைக்கண்டாலும்
ரசிக்கும் என் வயது

இன்றோ - அந்த
உலகையே மறந்து
உன்னையே
பின் தொடர்வது ஏன்
என் மனது

உன்னை மட்டுமே
தினம் - ரசிக்க வைத்தாய்
எனினும் - எதற்கு
சிறைபிடித்தாய்

பக்கத்தில் இருந்து கொண்டே
தொடர்ந்து பயணிக்கும்
தண்டவாளமாய்
தினம் - நீயும் நானும் .......

எழுதியவர் : கிச்சா பாரதி (27-Dec-13, 10:50 am)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : neeyum naanum
பார்வை : 114

மேலே