நான்

நான்
அழகின் ரசிகன்
ஆதலினால் கவிஞன்
அன்பின் ரசிகன்
ஆதலினால் மனிதன்
ஆதரிசங்களின் ரசிகன்
ஆதலினால் தலைவன்
வண்ணங்களின் தாசன்
ஆதலினால் வானவில்லின் நண்பன்
முகிலின் தோழன்
ஆதலினால் மழையில் சாரலன்
தமிழின் ரசிகன்
ஆதலினால் கவிதையின் காதலன்
கவிதாவின் ரசிகன்
ஆதலினால் கற்பனைப் பொய்யன்
ஒளியின் ரசிகன்
ஆதலினால் உள்ளத்தில் உதயன்
இரவின் ரசிகன்
ஆதலினால் நிலவின் நண்பன்
அவளின் தாசன்
ஆதலினால் அன்புக் காதலன்.
ஆரவார ஆர்பாட்டங்களுக்கு அப்பாற்பட்டவன்
ஆதலினால் அமைதிப் பொழிலன்
வெளிச்சம் கூட்டத்திலிருந்து விலகியே நிற்கிறேன்
ஆம் நான் ஒரு தனிமை ரசிகன் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Dec-13, 6:14 pm)
Tanglish : naan
பார்வை : 782

மேலே