கடிதம் ...!!!!


தொலைக்காட்ச்சி
தினசரி
வார இதழ் என
எல்லாவற்றிலும்
என் ராசிக்கான
பலாபலன்களை உறுதி செய்துகொண்டுதான்
அவளிடம் கடிதத்தை கொடுத்தேன்
இம்முறையும் பிரிக்கப்படாமலேயே
கிழிக்கப்பட்டது
அடுத்தமுறை அவளின்
ராசிக்கான நல்லநாளில்
கடிதத்தை கொடுக்கிறேன்
படிக்கிறாளா என பார்ப்போம்....!!!!!




எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (2-Feb-11, 3:51 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 331

மேலே