எழுவாய் தமிழா
தமிழா தமிழா துயில்ந்தது போதும்,
தடைகள் தகர்க்க நீ எழுவாய்
நீ தரித்திரம் தன்னில் திழைத்தது போதும்
சரித்திரம் படைக்க நீ எழுவாய்
கனவில் காலம் கரைந்தது போதும்
உண்மையை உணர்த்த நீ எழுவாய்
முடியும் என்ற வார்த்தையை தவிர
மற்றதை மறந்து நீ எழுவாய்