விழியதனை ஈவோம்
 
 
            	    
                போகட்டும் என்றுவிட்டுவிட்டால்
புதைந்துவிடும் பூகோளம் 
புதைந்தது விருட்ஷமானால் 
புவிதனக்கு மகிழ்வுதானே 
காட்சியிங்கு எழுதிரண்டு 
கவியொன்று அமைக்க 
காணும் உலகை கற்பனைக்கு 
விருந்தாக்கும் விசித்திரமே 
உன்னை தொலைத்து என்னை தேட 
உணர்வங்கு அற்றதே 
உதவி இரண்டு ஒளியினூடே
உலகம் சுற்றி மகிழ்ந்தோம் 
இற்று போன இறுதி  மெய்யில் 
இமைமூடி உறங்கும் 
உற்றுநோக்கிய உந்தன் விழியை 
உதவி தானம் செய்திடு 
மாண்டவரால் மீண்டும் பெற 
வழியொன்று உண்டு 
ஒளியற்றோர் வழிகாண
விழியதனை ஈவோம் 
பொசுக்கும்  நெருப்புக்கு இரையாவதை தடுத்து  
அறிவு பசிக்கு அளிப்போம் விதையாய்  விடுத்து  விழி புதைந்தால் விரயமாகும் கொடுத்து 
மகிழ்வோம்  கோடியில் ஒருவராய் ...
 
                     
	    
                
