துணிவில்லை எனக்கு

எனக்குள்ளே எத்தனை
போராட்டம் !

கடவுள் உண்டென்று
சொல்லவோ!
கடவுள் எங்கே என்று
கேட்கவோ
துணிவில்லை எனக்கு!

காதலை சொல்லவோ
காதலை மறக்கவோ
துணிவில்லை எனக்கு!

உதாசின படுத்திய உறவுகளை
விட்டு விலகிவிடவோ
ஒட்டி உறவாடவோ
துணிவில்லை எனக்கு!

கடன் கேட்கவோ
கொடுத்த கடன் கேட்கவோ
துணிவில்லை எனக்கு!

குடி பழக்கம் மறக்கவோ
குடிகாரன் நானென்று சொல்லவோ
துணிவில்லை எனக்கு!

மனசாட்சிக்கு பயப்படவோ
மனசாட்சியை கொல்லவோ
துணிவில்லை எனக்கு!


அநீதியை தட்டிகேட்கவோ
கண்டும் காணாது போகவோ
துணிவில்லை எனக்கு!

வேதனையோடு துணிந்து சொன்னேன்
சான்றோர் ஒருவரிடம்!

கடவுள் இருந்தால்
இருக்கட்டும்
என்று துணிந்து விடு!

காதலை சொல்ல துணி
காதல் இல்லையென்றால்
மறக்க துணிந்து விடு!

உறவுகளுக்கு உன்னை
ஓருநாள் புரிய வரும்
உறவாட துணிந்து விடு!

கொடுக்கவோ
கேட்கவோ வேண்டாம்
உதவிட துணிந்து விடு!

உனது பிள்ளை குடிகாரனாக
உனக்கு சம்மதமா?
குடியை மறக்க
துணிந்து விடு!

மனசாட்சியை
நண்பனாக்க
துணிந்து விடு!

அநீதி கண்டால்
காவல் நிலையத்தில்
கண்டதை சொல்ல
துணிந்து விடு!

என்றே
சான்றோர் என்னை
துணிந்துவிட சொன்னார்!

துணிந்து சென்றேன்
காதலை சொல்லிவிட்டு
காவல் நிலையம் செல்லாமென்று!
* * * *

கோடீஸ்வரன்

எழுதியவர் : கோடீஸ்வரன் (29-Dec-13, 9:01 pm)
Tanglish : thuninthu vidu
பார்வை : 108

மேலே