+குடி குடி குடி உன் உயிரை எடுக்கும்வரை குடி+

குடிகாரா! குடித்தென்ன கண்டாய்?
பாதி தமிழ்நாட்டைக் கொன்றாய்!
குடி உன்னை
படிப்படியாய்
கொல்லுவதை கூட தெரியாமல்
குடியில் திளைத்து நின்றாய்!
குடியின் பிடி
உன் கழுத்தில்
இருப்பதைக் கூட அறியாமல்
குடியின் மடியில் வீழ்ந்து கிடந்தாய்!
குடிக்கும்முன்
நீ தேவனைப் போல பேசுவாய்!
குடித்தபின்
உன் பேச்சை
உன் பிள்ளை கூட கேட்கமுடியாது!
குடித்தபின் உன்னால்
சரியாய் நடக்கவும் முடியாது!
அருகில் நடப்பதும் தெரியாது!
குடித்து குடித்து கெட்டுப்போன
உன் ரத்தம் கூட
தேவைப்படும் போது
உன் சொந்தத்திற்கே உதவாது!
குடிப்பது நீ துக்கத்தை
மறப்பதற்காக என்றால்
குடித்தபின் உன்னால்
பலருக்கு துக்கம்
குடிப்பது உன் சந்தோசத்திற்காக என்றால்
அதனால் உன் வீட்டில்
பலரது சந்தோசம் போவது
உனக்கு தெரியுமா?
நாட்டினில் எதிரி வெடிப்பதும்
வீட்டினில் நீ குடிப்பதும் ஒன்றே!
வெடிப்பதால் நாடழியும்!
குடிப்பதால் வீடழியும்!
உன் வீட்டிற்கு நீயோர் விரோதியா?
இல்லை தீரா வியாதியா?
குடித்து குடித்து
நீ படிக்காமலேயே வாங்கிய
ஒரே பட்டம்
'குடிகாரன்'

குறிப்பு: மீள்பதிவு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Dec-13, 9:08 pm)
பார்வை : 376

மேலே