மொட்டுவிட்ட காதல்..

கடல் மேல் எழுந்த மின்னல் போல்-அவள்
கண்ணொளி பாய்ச்சிவிட்டாள்
காதலில் விழுந்துவிட்டேன் -வேறு
காரியங்கள் ஓடவில்லை
கன்னி மனதில் இடம் பிடிக்க
கண்கள் நித்திரை கொள்ளவில்லை
பல யோசனை செய்து வந்தேன்
கட்டி கரும்புசுவை கவிதை வரைந்து
அவளிடம் காணிக்கை என்றேன்
மெத்த ஒருபார்வை எனை பார்த்து
கவிதை எனக்கா என்றாள்
மேனியில் மின்சாரம் பாய்ந்தவன் போல்
வாய் குளறி "ஆம்" என்றேன்
மனதில் சிலவரி படித்து மறுபார்வை
எனை பார்த்தாள்- அந்த காந்த பார்வையிலே
அவள் ஆவி தழுவிவிட்டேன்
மாதுளை வாய்திறந்து ஓர் வார்த்தை
மீண்டும் கலப்போம் என்றாள்!
சிந்தை பித்தேறியதனால் எங்கே! எப்போது
என்று வினவ மறந்துவிட்டேன்........
நாள்தோறும் காத்திருந்து அவள்
நிழல்மட்டும் பார்த்திருந்தேன்
நிஜரூபம் வரவில்லை- நிம்மதி
இழந்துவிட்டேன்.

அவள் மேல் உள்ள காதலை காவியமாக்கி
கற்பனையில் கலந்திருந்தேன்
காரிகை தரிசனம் மீண்டும் கிடைக்கும்வரை
கவிதைகள் கோர்த்திருந்தேன்
ஈங்கிவள் நினைவில் உடலம்
சோர்ந்துவிட்டேன் - உணவும் மறந்துவிட்டேன்
அவளை கனவில் வரவழைத்து காதல் பேசினேன்
காதோரம் காதலை சொல்லி இலக்கியம் படைத்துவிட்டேன்!

கண்கள் இமை திறந்ததும் காட்சிகள் ஏதுமில்லை
பெரும் கவலையை சுமந்துகொண்டேன்
பெண்ணே கண்ணே பொன்னொளியே
கனவின் வியனுருவே உனை காண்பேனோ
கானல் நீர் ஆவேனோ என் ஏக்கம் தீர்ப்பாளோ
என்று பசுமையாய் அவள் நினைவை மனதில் தேக்கி வைத்தேன்!
காதலும் மாறவில்லை - பல
காலங்கள் கடத்திவிட்டேன் - ஓர்தினம்
இயற்கையுடன் பேச சோலை சென்றேன்
அங்கு பாடும் குயிலும் பூவை மொய்க்கும் வண்டுகள் போல்
சிறுவர் கூட்டமும் காதலர் கூட்டமும் இருந்தனர்
ஆங்கொரு ஏந்திழையாள் கையில் குழந்தையுடன்
மழலையாடக் கண்டேன்!

மின்வெட்டு, கண்வெட்டு பொன்வெட்டு எல்லாம்
என் காதலியை ஒத்திருக்க கண்துடைத்து
மீண்டும் பார்த்தேன்! பார்த்தேன்! பார்த்தேன்
பார்ப்பேனோ என்றிருந்தவளை பார்த்தேன்
அவள் துணைவனுடனும் மழலையுடனும் பார்த்தேன்
நின்ற இடத்தில் சுழன்றது இவ்வுலகம் நிலைதடுமாறினேன்
என் இதயத்தை இழுத்து வைத்து அறுத்தாற்போன்று
உணர்வுகொண்டேன்
அழகு பெட்டகம், பெண் தெய்வம்
இதயராணி காதல் இளவரசி தன் தலைவனுடன்
சோலைவிட்டு நீங்கினாள்
அந்த காதல் பொற்சிலையை
கவிதையிலே வடித்தேன்

காதல் காதல் காதல் காதற்போயின்
சாதல் சாதல் சாதல் என்ற
மகாகவியின் வரிகளை படித்தேன்.

எழுதியவர் : விஷ்ணுதாசன் (23-May-10, 10:39 am)
சேர்த்தது : விஷ்ணுதாசன்
Tanglish : mottuvitta kaadhal
பார்வை : 1240

மேலே