இயற்கை அன்னையே

மழை வேண்டும் வெள்ளமாய் அல்ல
தெளிந்த நீரோடையாய்!
காற்று வேண்டும் சூறாவெளியாய் அல்ல
சுகமாய் வீசும் தென்றலாய்!
நிலம் வேண்டும் பிரளயமாய் அல்ல
அனைவரும் ரசிக்கும் ரங்கோலியாய்!
நெருப்பு வேண்டும் சுட்டெரிக்கும் சூரியனாய் அல்ல
கடும்குளிரில் இதமளிக்கும் சிறு கனலாய்!
இவை அனைத்தும் பெற்றிறுக்கும் இயற்கை அன்னையே நீ வேண்டும் என்றென்றும் தாயின் பாசத்தோடு.