வானில் பூக்கும் ஈங்கைப் பூக்கள்

மலரும் ஈங்கை
மனதினில் தொடுத்து..

ஒளியொடு ஒலியும்
சேர்த்து எடுத்து..

வண்ணத்துப் பூச்சி
வண்ணம் கரைத்து..

கரும்பலகை வானில்
தீட்டப்படும்..

சில நொடி வாழும்
மின்மினி ஓவியம்..

மழலை முகத்திலும்
புன்னகை ஈங்கை
மலரச் செய்யும்
அந்த வாணவேடிக்கை...

எழுதியவர் : வெ கண்ணன் (30-Dec-13, 9:59 pm)
பார்வை : 172

மேலே