தடயம் – ஒரு பக்க கதை
தடயம் – ஒரு பக்க கதை
****************************************
லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகை சித்தாராதேவி
செத்துக் கிடந்தாள். அவள் அருகில் தூக்க மாத்திரைகள் சிதறிக்
கிடந்தன. அவள் கையருகில் இருந்த கடிதத்தை பிரித்துப் படித்தார்
இன்ஸ்பெக்டர் பாண்டுரெங்கன
-
“என் சாவுக்கு நானே காரணம். இது தற்கொலைதான்.
மானேஜர் காரணம் அல்ல. வேலையாட்கள் காரணம் அல்ல…
-
சித்திராதேவியின் கடிதத்தை ஊன்றிப் படித்தபின், இன்ஸ்பெக்டர்
பார்வை மானேஜரின் பக்கம் திரும்பியது.
“சித்திராதேவியை ஏன் கொலை செய்தாய்? உண்மையை ஒப்புக்
கொள்ளாவிட்டால் ஸ்டேஷனுக்கு கூட்டிப்போய் தலைகீழாக கட்டி
வைத்து அடித்து உண்மையை சொல்ல வேண்டிய நிலை உனக்கு
ஏற்படும்.
-
பயந்து போன மானேஜர், மிரட்டி அவளிடம் இந்த கடிதத்தை எழுதி
வாங்கி வலுக்கட்டாயமாக தூக்க மாத்திரை விழுங்க செய்து சாகடித்த
உண்மையை ஒப்புக்கொண்டார்.
-
ஏட்டு கண்ணையன் ஆச்சரியத்துடன் கேட்டார். கடிதத்தில் ஒன்றுமே
தடயமே இல்லையே… எப்படி சார் மானேஜர் தான் கொலை செய்தார்
என்ற உண்மையை கண்டுபிடித்தீர்கள்?
-
இன்ஸ்பெக்டர் கடிதத்தை ஏட்டிடம் கொடுத்து விட்டு கூறினார்.
படித்து பார். இது தற்கொலை தான் என்று எழுதியிருப்பதில் இது
கொலைதான் என்பதை மற்ற எழுத்துக்களை விட அழுத்தி
எழுதியிருக்கிறாள். அதைப்போல் மானேஜர் காரணம் அல்ல என்று
எழுதியிருப்பதில் மாஜேனர் காரணம் என்பதை மற்ற எழுத்துக்களை
விட அழுத்தி எழுதியிருக்கிறாள். அழுத்தப்பட்ட எழுத்துக்களை மட்டும்
சேர்த்துப்படி இது கொலை தான்… மானேஜர் காரணம்.
-
==============================================
நன்றி: குமுதம்