இயற்கை வேளாண் விஞ்ஞானி

பாரம்பரியத்தை
காப்பாற்ற நினைத்தவர்

இயற்கையான
விவசாயத்தை நம்பியவர்

மருந்தில்லா விளைச்சலை
மேம்படுத்தப் பாடுபட்டவர்

இயற்கை விவசாயத்தையே
மூச்சாகக் கொண்டவர்....

அவரின் கனவு விதைகள்
இனி நம்மால்
வளர்க்கப்படல் வேண்டும்

மருந்தையே
உணவாகக் கொள்ளும்
நமது நிலை மாறிடல் வேண்டும்

உண்மையான
நமது விதைகள்
மீண்டும் உயிர்பெற்று வந்து
நோயற்ற தலைமுறைக்கு
வழி வகுக்க வேண்டும்

மண்ணில் புதைக்கப்படும்
அவரின் உடல் கூட
இந்த மண்ணிற்கு உரமாகும் !

இலட்சியத்திற்காகப்
போராடிவந்த
அவரின் ஆன்மா
நமக்கெல்லாம் வழிகாட்டும் !!

அவர் நம்மை விட்டு
மறையவில்லை...
நம்மாழ்வார்
இனி எங்கும் நிறைந்திருப்பார்...
மருந்து விதைகளை
அளிக்கும் சக்திகளிடம் இருந்து
நம்மை விடுவிக்கவும் .,
அந்த
மருந்து விதைகளை
அழிக்கும் சக்தியை
நமக்குக் கொடுப்பதற்கும் !!

நமக்காக வாழ்ந்த
நம்மாழ்வார்
இனி
நமக்குள் வாழ்வார் !!!

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (31-Dec-13, 10:21 am)
பார்வை : 120

மேலே