+இனிய புத்தாண்டே வருக+

இனிய புத்தாண்டே வருக!
இனிக்கும் பழரசமே தருக!
அதனால் பரவசமே பரவ‌
அனைவரும் மகிழ்ச்சியாய் உலவ‌

இனிய புத்தாண்டே வருக!
இனிக்கும் கற்கண்டே தருக!
மணக்கின்ற பூச்செண்டு கொடுத்து
மனதினில் நம்பிக்கையை உடுத்து

இனிய புத்தாண்டே வருக!
இனிக்கும் தேன்கொஞ்சம் தருக!
இனிய கீதங்கள் இசைத்து
இனியோரின் வாழ்வை உயர்த்து

இனிய புத்தாண்டே வருக!
இனிக்கும் இன்பங்கள் தருக!
இனியும் துன்பங்கள் வேண்டாம்!
அணியும் புன்னகையே போதும்!

இனிய புத்தாண்டே வருக!
இனிக்கும் நல்வாழ்வை தருக!
பனிக்கால குளிர்போல ஊடுருவி
உணர்வெங்கும் சந்தோசம் நீதருவி!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Dec-13, 12:35 pm)
பார்வை : 2443

மேலே