முழுமையைக் காணவும் முனைந்திரு

புது வருட வாழ்த்துக்கள்


வருடம் 2013 இன்

முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும்

முழுமையாகச் சென்றுவிட்டன!

இப்படியாக வாழ்நாளின் வருடங்களும்

முழுமையாகச் சென்று சேர்ந்தன!!

ஆகவே

முழுமையைக் கோட்டை விட்டவர்களாய்....

ஆட்டம் பாட்டத்தில்

ஆர்ப்பரித்துத் திரிகின்றோம்!!!

ஆகவே நண்ப,

செழுமையை நோக்கி போக்கும் நேரத்தில்,

முழுமையைக் காணவும் முனைந்திரு!

முழுமையில்,

உன்னையும் உலகையும் ஒன்றாகப் பார்!!

உன்மத்தம்! உன்மத்தம்!! உன்மத்தம்!!!

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (31-Dec-13, 4:38 pm)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 68

மேலே