ஆண்டுகள் பிறப்பது எதற்காக
குப்பையில் வீழ்ந்துக் கிடப்பது - நாட்காட்டியின்
காகிதங்களல்ல. - உன் எதிர்க்
காலங்கள்.
கூட்டத் தெரியாதவனுக்குத் தான்
கணக்குத் தெரியாது. - நாட்களைக்
கிழ்த்துப்போடும் உனக்குமாக்
கணக்குத் தெரியவில்லை. - நீ
கிழத்தெறிந்த நாட்காளைக்
கணக்குப் போட்டுப்பார் - உன் எதிர்க்
காலங்கள் குப்பையில் விழ்ந்துக்கிடக்கும்.
ஆண்டுகள் தோறும் - நீ
ஆற்றிய ஆற்றல்கள் என்னென்ன?
நாட்களைக் கிழிக்கும்போது - உன்
நல்ல காலமும் கிழிக்கப்படுகிறது.
நாட்கள் நாழிகையாய் நகர்ந்து
நேரங்களாய்நகர்ந்துக்கொண்டிருக்கிறது.-நீயோ
நல்லகாலம் வரவில்லை என்று
நல்ல நேரங்களையும் தவற விடுகின்றாய்.
ஆண்டுகள் பிறப்பது எதற்கு? - உன்
ஆயுளையும் அது கணக்கிட்டு வருகிறது.
அதற்குள் நீ அடிமேல் அடியெடுத்து சாதிக்கவேண்டியத்தை சாதித்துவிடு..
நீ பிறந்த ஆண்டுகள் எங்கே? - இப்போ
நீ வளர்ந்த ஆண்டுகள் இங்கே.
நீ வளர்ந்ததும் ஆண்டுகள் உன்னையும்
நகர்த்திக்கொண்டிருக்கிறது.
எந்த ஆண்டு உன்னை சிரிக்கவைத்தது?
எந்த ஆண்டு உன்னை அழவைத்தது?
சிரிக்க வாழ்வதும், சிதைந்து வாழ்வதும்
சிந்திக்கத் தெரியாத உன்னால் வருவதாகும்.
வாழ்வின் ஆதாரம் ஆண்டுகளில் இல்லை.
வாழ பிறந்த உன்னால் வருவதாகும்.
வாழ்வதற்கு வந்தவன் நீ என்பதை உணர்ந்தால்
தாழ்வதர்க்கும் தாழ்ந்து விடாமல்
தலை நிமிர்ந்திடவே ஆண்டுகள் உன்னை
தொட்டுப் பார்க்கவே வருகின்றன.
சுவையானதை சுவைப்பதைப் போல் - வாழ்வில்
சுமையானதையும் சுமந்துப் பார். சுவைத் தெரியும்.
சுமையெல்லாம் சுமை என்றால் ஆண்டுகள் கூட
சுமையாகத் தான் உன்னைக் கடக்கும்.
ஒரே ஆண்டில் பலதும் நடக்கும். - அதிலே உன்
ஒப்புரவற்ற உழைப்பை விதைத்து பார்.
ஒளிமயமான காலம் உதயமானதை அறிவாய்.
ஒளியால்தானே இருட்டை விரட்டமுடியும்.
உழைப்பால் தானே வறுமை ஓய்வு எடுக்கும்.
மனிதா - நீ கிழித்தெறியும் நாட்களை
மனதில் தேக்கிவை.. அந்தந்த நாட்களில்
மடித்து வைத்த நன்மைத் தீமைகளை.-நீ
மடியும் போது உன்னை உணர்த்தும்.
நகர்வது ஆண்டுகள் அல்ல காலங்கள்.-எனவே
நகரும் ஆண்டுகளோடு நீயும் நகரு நல்லவனாய்.
நாட்களைக் கிழிக்கும்போது கணக்குப்போட்டு வை.
நாட்களும் உன்னைக் கிழிக்கும்போது நகர்வாய்
ஆண்டுகளோடு நம்மையும் ஆள
ஆண்டவனாய் வருகின்ற பணத்தை ஆளவே
அதன் வரத்தை இந்த ஆண்டில் பெறுவோம்.
அதன் மமதையை அடக்குவோம்.
ஆண்டுகள் கடப்பது நன்மைக்காகவே.
அதை உணர்ந்து ஆண்டுகளை வரவேற்போம்.
ஆனந்த வாழ்வைப் பெறுவோம். - புத்தாண்டில்
அனைவரும் ஆனந்தமாய் வாழ
அடியவனின் அன்பான நல்வாழ்த்துக்கள்.