வாழைமரம் – ஒரு பக்க கதை

வாழைமரம் – ஒரு பக்க கதை
*****************************************
குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை
உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும்
வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம்,
சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து
விட்டீர்களே’ என்றான்.
-
வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச்
சொன்னார் தந்தை.
-
“தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா
இதன் சரித்திரம் என்ன, தெரியுமா? இது தன்னுடைய
வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய
எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது.
-
இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான்.
இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய
வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள்
மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக
வைத்தார்கள்.
-
தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம்.
அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும்
ன்னுடைய தந்தைக்கும் பெருமை.
இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ,
துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை.


- கே. கணேசமூர்த்தி

எழுதியவர் : கே. கணேசமூர்த்தி (1-Jan-14, 10:42 am)
பார்வை : 135

மேலே