பிறந்த நாள் கொண்டாட்டம்…
பிறந்த நாள் கொண்டாட்டம் ….
*********************
ரிங் ரிங்... ரிங் ரிங் …
அழைக்கிறது தொலைபேசி…
நேரமோ 12
அழைப்பதோ உயிர் நண்பன்
தூக்கமயக்கம் கண்ணை கிழிக்க …
“சொல்லு டா மச்சான்…”என்று கம்மிய குரல்…
“வாழ்த்துக்கள் மச்சான்” என்று மறு குரல்…
வறண்ட நிலத்தில் பெய்த மழை போல் ஒரு மகிழ்ச்சி …
துள்ளி எழுந்து “நன்றி மச்சான்” என்றது இவன் குரல்
விடிந்த காலை தண்ணீர் தெளித்து எழுப்பும் தாய்;
தலை தடவி “ எழுந்திரு மகனே” என்றது தாயின் குரல் ...
போர் தொடுத்து சுதந்திரம் கண்டவன் போல மகிழ்ச்சி அவன் கண்களிலே
“அம்மா இன்னம் 5 நிமிடம்” என கேட்டான்...
அவன் பிறந்தநாள் சலுகையை மறந்து
அவள் அவன் தலை கோதி நெற்றி முத்தத்துடன்
“இன்று உன் பிறந்தநாள் எழுந்திரு” என்றாள்
அவனும் எழுந்து குளியல் இட்டு புத்தாடை அணிய வந்தான்
தாயோ அறுசுவை உணவுடன் காத்திருந்தாள்
புத்தாடை பையினிலே 1000 ரூபாய் அம்மா வைத்தநோட்டொன்றில் காந்தி தாத்தா வாழ்த்தி நின்றார்…
அவனும் வயிறார உண்ண அவளும் மனமார ரசித்தாள் ...
பாயாசமும் கொடுத்தாள் …
அவன் மனமோ வாசம் கொண்ட மலர்போல புத்துணர்வாய்...
அன்னையைக் கட்டித் தழுவி நெற்றியில் அவன் இதழ் பதித்தவனாய்…
“நன்றி அம்மா “ என்ற சொல்லுடனே.....
இருப்பினும் ஓர் கவலை தந்தை வாழ்த்து இல்லை என…
நண்பர்களின் குறுந்தகவல் கண்டபடி வெளியில்செல்ல...
பெரும் அதிர்ச்சி கொண்டான் திகைத்தும் நின்றான்...
பளபளக்க கருப்பு நிற புது மோட்டார் சைக்கிள் ஒன்று....
கண்கொள்ளும் நிறம் கண்டு ஓடிச்சென்றான் தடவிப்பார்க்க...
சாவிக்கொத்தில் ஒரு அட்டை
“அன்பு மகனுக்கு தந்தையின் அன்பு பிறந்தநாள் பரிசு," வாழ்த்துக்களுடன் …
இருந்தது அட்டைமேல்…
மலர் கொண்ட தேன் போல இனித்தது அவன் மனது…
கண் மூடி அதை ரசிக்கும் முன்னே அழைத்தது தொலைபேசி …
இத்தாலி அழைப்பு அது…
“அப்பா.......” என்று குரலுடனே வாழ்த்தும் பெற்றான் தந்தையிடம்….
சென்று கண்டும் வந்தான் நண்பர்களை…
மதிய உணவில் ஆட்டு இறைச்சி
கமகமத்த பொரித்த கோழி...
பிரியாணியும் உண்ட பின்னே இனிப்புகளும்…
பின்னேரம் தொடங்கியது பிறந்தநாள் கொண்டாட்டம்…
புது வண்டி பின்னாடி இரு நண்பர்
…
பையினிலே சேர்த்த பணம்…
பின்னேர சினிமா...
முடிந்த பின்னே சோமபானம்…
திட்டமிட்டு கொண்டாட்டம் இனிதே நிறைவு பெற
மாலையிலே கூடு திரும்பும் பறவை போல் திரும்பினர் அவர் வீட்டுக்கு...
குடித்ததின் உற்சாகம் புது வண்டியின் அதி வேகம்
போதையிலே மதியோடு விழியும் மயக்கம்
ஶடீஇர் பளார் க்ரிஈ டோக் டக் டிக் என்று ஒரு சத்தம்
ஓடிய லாரியின் சக்கரத்தில் நசி பட்ட தவளை போல
மூவருடன் சேத்து புது வண்டியும் வீற்று நின்ற மரத்தினிலே மோதி….
வீர் வீர் சத்தம் அர்ச்சுனனின் வில் தொடுத்த அம்பு போல
விரைந்து வந்த அம்புலன்ஸ் வண்டி…
அம்மா ஆஅ ஊ என சத்தத்துடன் ஆஸ்பத்திரி சென்றடைய….
வைத்தியரோ பெரும் முயற்சி....
அவன் தொலைபேசி எண் கண்டு அவன் தாய்க்கோ அழைப்பு....
தீமேல் இட்ட புழுப்போல துடிதுடித்து ஓடிவந்தாள்,,,
குடித்திருந்த காரணத்தால் பாசக் கயிறு விட்டான் எமதர்மன்...
வைத்தியனோ தோற்று நின்றான்...
பால் கொடுத்து கழுத்தறுத்தவள் போல் துடிதுடித்தாள் தாயுமவள்….
“20 திலே ஏன் பறித்தாய் 60 பதிலே நான் இருக்க???...
உன் தர்மம் இது தானோ எமதர்மனே” என அவன் பாட்டி....
அடி பட்ட காரணத்தால் உடன் எரிப்பீர் எனக் கூற அவன் தந்தைக்கு அவன் இறுதிச் சடங்கு skype லே…
40 திலே அனாதையாயினர் அவர் இருவருமே…
"ஏன் மறந்தோம் நம் மரணம்
கொண்டாடும் பிறந்தநாள், நீ இறக்கும் அந்நாளின் வரவேற்பென்றோ….
இழந்த ஒருவருடத்தை கண்டு அழுவதன்றி
நிஜமில்ல புது வருடம் வரவேற்பதேனோ…
என்றும் அன்புடன் -ஸ்ரீ-
"இது எனது முதல் கதையாகும் ...சிறுகதை எழுத முயற்சித்துள்ளேன் .. கருத்துக்களை பகிரவும் பிழைகளை சுட்டிக் காட்டவும்" ......... நன்றி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
