ஆம் நாங்கள் தமிழர்கள்

நாங்கள் தமிழர்கள்....
முச்சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் நாங்கள்....
ஆம் நாங்கள் தமிழர்கள்....

வீரமும் கல்வியும் கலந்து உலகை வியக்க வைத்த
உன்னத புதல்வர்கள் வாழ்ந்த மண்ணின்
இன்றைய புதல்வர்கள்
ஆம் நாங்கள் தமிழர்கள்....

உலகின் முதல் மனிதன் கற்களை வைத்து
நெருப்பை கக்கிய பொழுது ,
ஓலைகள் வைத்து இலக்கியம் வடித்தவர்கள்
ஆம் நாங்கள் தமிழர்கள்....

தொல்காப்பியன் கம்பன் வள்ளுவன் போன்ற
மா மனிதர்களை ஈன்ற வீர தமிழர்கள்...
கடை ஏழு வள்ளல்களை பெற்ற உன்னத பூமியின்
உத்தம புதல்வர்கள்...
ஆம் நாங்கள் தமிழரே...

இப்புவியில் வேறு யார்க்கு உண்டு வானை முட்டும்

இப்புகழ்...

இனி கர்வமாக உலகிற்கு எடுத்து

சொல்கிறோம் நாங்கள் தமிழர் என்று...
இது தமிழ் தேசம் என்று...

எழுதியவர் : சிவ சிதம்பரம் (1-Jan-14, 10:57 am)
பார்வை : 449

மேலே