நன்றிகள் பல

அனைவருக்கும் வணக்கம்.

இணைய தளப் படைப்பாளிகள் பேரவை, புதுச்சேரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஐயா அகன் அவர்களுக்கு நான் மிகவும் கடைமைப்பட்டவாகிறேன்.

இந்த வருடத்திற்கான வாழ்வியல் சிந்தனைகள் தரு செம்மல் - 2013 என்ற விருது எனக்கு கிடைத்திருக்கிறது.
எனக்கான மகிழ்வினை பகிரவே இச் சிந்தனைகள்.

படைப்பாளிக்கு அதுவும் ஆரம்ப கால கட்டங்களில் இருக்கும் படைப்பாளிக்கு விருதுகள் என்பது மிகுந்த மகிழ்வினையும் ஊக்கத்தையும் தரும். இவ் விருது இன்று (01-01-2014) கிடைத்திருப்பது இன்னும் மகிழ்வினை தருகிறது.
இது எனது முதல் விருது. மகிழ்வினை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

படைப்பாளிகளே, நிறைய படியுங்கள், படையுங்கள். எது சிறந்தது என்று தேர்ந்தெடுத்து படியுங்கள்.
படைப்புகள் அனைத்தும் வாசிக்கப்படுகின்றன என்பது நிதர்சமான உண்மை.

நமக்கு வழிகாட்ட, பாராட்ட, தெளிவிக்க, ஊக்குவிக்க நன்னெறிப்படுத்த என எல்லாவழிகளிலும் மிகப் பெரிய வழிகாட்டும் ஆசான்கள் இருக்கிறார்கள்.

வாருங்கள் சிறந்தவற்றைப் படைப்போம் நமக்காகவும் நமக்கு அடுத்த சந்ததிக்காகவும்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (1-Jan-14, 3:13 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
Tanglish : nanRikaL pala
பார்வை : 507

சிறந்த கட்டுரைகள்

மேலே