நட்பால் எட்டிய உச்சம்

இவன் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. அவன் இவனை உயிர் நண்பனாய் ஏற்றுக்கொண்டதை கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. அவனது நட்புக்கு நான் பொருத்தமானவனாக இருப்பேனா? என்னால் அப்படி இருக்கமுடியுமா? என்னால் முடியும் என்ற நம்பிக்கை அவனிடம் இருப்பதால் அவனே வலியவந்து என்னை நண்பனாய் ஏற்றுக் கொள்ளும்போது எனக்கு ஏன் இந்த சந்தேகம்.சரி. பழகித்தான் பார்ப்போமே. நான் அவனுடன் பழக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நண்பன் என்றால் பணத்தை அடிக்கடி செலவழிக்க வேண்டுமே. அவனால் முடியும். என்னால் முடியாதே. இருந்தாலும் அவனது நட்பை விட மனமில்லை. ஒருநாள் அல்ல பல நாள் அவனை பார்க்காமல் இருந்தேன். அவனே ஒருநாள் என்வீடு தேடி வந்து என்னை அழைத்தான். அப்போதுதான் உணர்ந்தேன் அவனிடம் உண்மையான நட்பு இருக்கிறது என்று. நானும் அவனும் சுற்றித் திரிந்தோம். அவன் எனக்காக செய்த செலவுகளை நானும் ஈடு செய்ய வேண்டும் என்பதால் என் தாய்,தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டேன். அவர்களும் மனம் கோணாமல் எனக்கு செலவுக்குப் பணம் கொடுத்தார்கள். நான் அவனுக்காக செலவுகள் செய்ய ஆரம்பித்தேன். அவன் என்னை வசைப் பாடினான். "டேய், உன் தாயும்,தந்தையும் தருகின்ற பணத்தில் எனக்கு செலவு செய்யவேண்டாம். ஏனென்றால் நீ வசதி இல்லாத குடும்பத்தில் இருக்கின்றவன். ஆனால் என் தந்தையோ அரசாங்கத்தில் நல்ல பதவியில் இருக்கின்றார். அதனால் என் செலவுக்குப் பணம் தருகின்றார். நீ நாளைக்கே சம்பாதிக்க ஆரம்பித்தால் நீ சம்பாதித்த பணத்தில் எனக்கு செலவு செய் என்றான். இது அவன் மீது மேலும் நட்பை வளர்த்துவிட்டது என்னுள். யோசித்தேன்.என் தந்தைக்கு உதவியாய் சில வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். அதற்கு என் தந்தை என்செலவுக்குப் பணம் தந்தார். பெற்றுக் கொண்டு என் நண்பனிடம் ஓடினேன். என் நண்பன் மகிழ்ந்தான். ஆனால் செலவு செய்ய தடை விதித்தான். ஏனென்று கேட்டேன். "டேய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் செலவு செய்யணும் என்று நினைக்காதே. இதுவே கெட்டப் பழக்கமாகும். இதனால் உங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் என்னைக் காண்டால் வெறுப்பு வரும். அப்போ நீ உங்க அப்பாவையும் அம்மாவையும் எதிர்த்து நிற்பே. இதெல்லாம் என் நட்பால் வருவதுதானே. அதனால் சம்பாதிக்க ஆரம்பித்ததும் உன் தாய், தந்தைக்குக் கொடுத்ததுப் போக நம் செலவுக்கு எடுத்துக்கொள்ளணும். அப்போதுதான் உனக்கு சம்பாதிக்கணும் என்ற நினைப்பு தோன்றும் என்றான். மேலும் நான் அதிர்ந்தேன் அவனது தூய நட்பை எண்ணி. முடிவெடுத்தேன் இனி நண்பன் என்றால் இவன் ஒருவன்தான். இவனுக்காக பல நல்ல வழிகளைப் பின்பற்றி இவன் குடும்பத்தில் ஒருவனாக இடம் பெறவேண்டும் என்று உறுதிக் கொண்டேன். அப்படியே அவன் குடும்பத்தில் இடமும் பிடித்தேன். நண்பனின் மகள் பருவம் அடைந்தாள். நண்பனின் மனைவிக்கு நான் சகோதரன் என்ற முறையிலும், என் நண்பனின் மூத்தவன் என்ற முறையிலும் அந்த மகளுக்கு சில சீதனங்களை சபை நடுவே வைத்தேன். அந்தக் குடும்பமே என்னை வாரி அணைத்துக்கொண்டது. அவர்கள் அனைத்ததும் என் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் சிந்தியது. காலங்கள் வெகுவாக ஓடியது. என் நண்பனின் மகளுக்கு கல்யாணம் செய்ய வரன் தேடினார்கள்.நல்ல வரணும் அமைந்தது. நிட்ச்சியத் தாம்பூலத்தன்று புரோகிதர் பெண்ணுக்கு தாய் மாமனைக் கூப்பிடுங்கள் என்றார். உடனே என் நண்பனின் மனைவி என்னைப் பார்த்தாள். உங்களைத்தான் நீங்கதானே பெண்ணுக்கு தாய் மாமன். போங்கள். என் மகளுக்கு, அதான் உங்க மருமகளுக்கு மாலைப் போடுங்கள்.என்றாள். அதிர்ந்துப் போனேன். நானா? என்னையா? என்றேன். என் நண்பனும் என் அருகே வந்து "டேய் அன்றைக்கு நீ என்ன சொன்னே என் மனைவியிடம். அம்மாடி உனக்கு அண்ணனாய் நான் இருக்கிறேன். நீ கலங்காதே. உடன் பிறந்த அண்ணன் துரோகம் செய்துவிட்டான்.அத்தோடு உன்னையும் மறந்து விட்டன. கவலைப் படாதே. நான் இருக்கிறேன். எந்தக் காலத்திலும் என்னால் முடித்தவரை இந்தக் குடும்பத்துக்கு உறுதுணையாய் இருப்பேன் என்றாயே. அதுதான் இன்றைக்கு எங்க மகளோட, உன் மருமகளோட நிட்ச்சியத் தாம்பூலம். உனக்குத்தான் தாய் மாமன் என்ற அந்தஸ்து இருக்கிறது. அதனால்தான் நானும் என்மனைவியும் என் குடும்பத்தாரும் அன்றைக்கே முடிவு எடுத்துவிட்டோம். இந்த ரகசியத்தை உனக்கு இன்றைக்கு இந்த சபை முன்னாடி சொல்கின்றோம். போடா எங்க மகளுக்கு, உன் மருமகளுக்கு செய்யவேண்டிய சுப சடங்குகளை உன் கையால் செய். என்றான். அவனுடன் சாதாரண நண்பனாக பழக ஆரம்பித்தேன். இன்று அந்த உண்மையான நட்புக்கு அவன் செய்த மரியாதை என்னை எங்கோ ஒரு உச்சத்தில் கொண்டு போய்விட்டது. நான் அழுவதா. நெஞ்சை நிமிர்த்தி பூரித்துக்கொள்வதா? ஆகா நட்புக்கும் எட்டிய உச்சம் கிடைக்கும் என்பதை என் நண்பரின் மூலம் நான் நன்கு அறிந்துக்கொண்டதால் என் மனைவியும் கண் கலங்கி நின்றாள்.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (1-Jan-14, 3:52 pm)
பார்வை : 1649

சிறந்த கட்டுரைகள்

மேலே