மகளிர் என்னும் மாதவம்
மண்ணின் பெருமை காக்கும்
மலர்களின் குவியல் ,
மாதா என்னும் பெயரைத் தாங்கும்
மகத்துவப்புதையல் ,
அன்பைப்போதித்திடும்
ஆனந்த நந்தவனம் ,
அன்புப் பால் தரும்
அதிசய பூமியின் அற்புதம்,
கண்களால் காவல் காக்கும்
கலங்கரை விளக்கம் ,
நம்மைக் கரையேற்ற வாழும்
காலம் தந்த படகு .
அயராது உழைக்கும்
அடிமைப் பறவை,
அல்லும் பகலும் நாடும்
அன்பின் ஆதரவை,
இதயத்தில் என்றும் உதிக்கும்
பூரண நிலா ,
இரவு பகல் தாலாட்டும்
இசையின் உலா,
வணங்கி வழி படும்
வாழையின் வர்க்கம்,
வற்றாமல் சுரக்கும்
வசந்த யாகம்,
நில்லாமல் எரியும்
நிரந்தர சக்தி ......சக்தி ...சக்தி.