+கண்ணாடி வாழ்க்கை+
பலமுகத்தை பார்த்ததுண்டு
சில முகம் சிரிப்பு தரும்
சில முகம் சோகம் தரும்
சில முகம் அன்பு தரும்
சில முகம் வெறுப்பு தரும்
ஒரு முகம் மறுமுகமாய் மாறும்
மறுமுகம் நறுமுகமாய் மாறும்
இன்முகம் வன்முகமாகும்
வன்முகம் இன்முகமாகும்
அடிக்கடி முகமாறுதோற்றப்பிழை
என் கண்முன்னே அறங்கேரும்
எனக்கு அனைவரின்
உண்மைமுகமும் தெரியும்
வாயில்லாததால் எவரிடமும்
எனக்கு புறம்பேச தெரியாது
நானுண்டு என் வேலையுண்டு
என இருக்கும் எனக்கும்
எப்பவாவது பொட்டலங்காரம் நடக்கும்
எனக்கு விருப்பமில்லாமலே..
மனிதவாழ்க்கையை விட
கொடுமையானதோ
இந்த கண்ணாடி வாழ்க்கை!
இப்படிக்கு
உங்கள் வீட்டு கண்ணாடி!