தலைவருக்கு வரவேற்பு

நெஞ்சு நிமிர்த்தி கொடி பிடித்து
காப்பி தண்ணீ குடிக்காமல்
கால் கடுக்க நின்று
உரக்க கோஷம் போட்டு
தொண்டை வறண்டு
வரவேற்பு கொடுத்தோம்
ஊர் எல்லையில்
கட்சி தலைவருக்கு
தலைவரின்
கருப்பு கண்ணாடி மூடிய
டொயோட்ட இநோவோ
கார் நிற்காமல்
நட்சத்திர விடுதியில் நின்றது
தலைவர் ஓய்வெடுக்க.

எழுதியவர் : arsm1952 (1-Jan-14, 5:29 pm)
பார்வை : 705

மேலே