பெற்றுத் தா 2014
சுவிஸ் வங்கியில் கணக்கு இல்லாத
அரசியல்வாதியை பெற்றுத் தா!
வியாபாரம் இல்லாத கல்வியும்
மருத்துவமும் பெற்றுத் தா!
மதுபானக் கடைகள் இல்லாத
சாலைகள் பெற்றுத் தா!
விலையில்லா குடிநீரும்
தடையில்லா பாசனநீரும் பெற்றுத் தா!
சற்றும் தடங்கல் இல்லாத
மின்சாரம் பெற்றுத் தா!
இளம்பெண்களின் பேரூந்து பயணத்தில்
பாதுகாப்பை பெற்றுத் தா!
சாதிகலந்து காதலித்து திருமணம் செய்தவருக்கு
மதிப்பைப் பெற்றுத் தா!
மக்கள் பணத்தில் நலத்திட்டத்தில் தன்பெயர்
வைக்காத அமைச்சரைப் பெற்றுத் தா!
நல்லவர்களுக்கு மட்டும் சமுதாயத்தில்
அங்கீகாரத்தை பெற்றுத் தா!
இனிவொரு கோரிக்கை கேட்டிட
அவசியமில்லாத 2015ஐ பெற்றுத் தா!