வருங்கால மனைவி

அன்னைக்கு நிகராக
அன்புக்கு அன்னையாய்
அறிவுக்கு அகராதியாய்
உறவுக்கு உண்மையாய்
உள்ளத்துக்கு உயிராய்
உரிமைக்கு உறுதியாய்
என் உள்ளத்தில்
தேரில் உலாவரும் தேவதையாய்
நான் காண்கையில்
கடவுள் தந்த பரிசாய்
கரம் பிடிதித்த
நாளில் இருந்து உன்னை
உரம் இட்டு வளர்க்கும்
உண்மை என் அன்பு ,,,,,,
குறும்பு விளையாட்டில்
அரும்பு மீசையை
நுள்ளி ,,,
வரம்பு மீறிய நீர் போல
உன் பகிடி ,,,
கரும்பில் ஊறிய
இனிப்பாய்
கனிய வைப்பேன் நான் உன்னை ...
கண்ணே நீ என் பெண்ணே என்று
முன்னே பின்னே சொல்லி,,,
வெட்க்கம் காண
வெகுளியாக்கி
என் பக்கம் எடுப்பேன் ,,,,
மழலை போல்
நீ என்னை
மனம் வைத்து
மடி சாத்து நீ
குறை கண்டதை
நிறையாக கொட்டு
என்னில் ,,,
நித்தமும் திருந்துகிறேன்
சத்தமில்லாமல் ,,,,,
கவலையும் காணாத
உள்ளமாய்,,,,
கண்ணீரும் கசியாத
பெண்ணாய்
காண்கின்ற காலமெல்லாம்
காதலிப்பேன் உன்னை ,,,,
அடுப்படியில் நீ
சமைக்கையிலே
படி படியா உன் அருகில்
பகிடி விட நானும்
பகல் இரவு தெரியா என்று
உன் மூஞ்சை நீட்டுகையில்
முகம் சுழிக்கா
உன் அன்பாய் நான்
செல்லமென சொல்லி
கள்ளமாய் கடுபேற்றுவேன்
உன்னை ,,,,,,
புளி மாங்காய் தேடி
உனக்காய்
அயல் வீடு போகையிலே
அப்பாவா ஆகிட்டே என்று
அரட்டையடிக்கும் நண்பர் கூட
ஆரவாரம் செய்து
அகமகிழும் ஆனந்தம்
உன்னால் என்னில் .....
மழலை ஈன்று
மனம் குளீர முதல்
கர்ப்பம் தரித்து
சொற்பனம் காணும்
பெண்ணாய் நீ
இருக்கையில்
அறு சுவை சமைத்து
உன் அருகில் நான்
வருகையிலே
நீ எதிர் பார்த்த கனவனாய்
நான் உன் மனதில் ....
குறிப்பு கொண்டு
நடிப்பு வேண்டாத பெண்ணாய்
என்னில்
விருப்பம் கொண்டு
திருப்பம் காட்டும் பெண்ணாய்
அகம் தேடும் உள்ளம்
நீயே என்று
புறம் சொல்லி புரிய வைத்து
ஆடம்பரம் இல்லாத
அழகியாய் என்னில்
அவதரித்த தேவையாய்
நீ என்னில் ,,,,
மங்கை இருக்கையில்
கங்கையில் பட்ட
மீனாய் கண் விழிக்க
அங்கங்கள் நடுங்க
சொந்தங்கள் நெருங்க
பந்தியில் முந்திய முதியோரும்
முனுமுனுக்கும்
வார்த்தையும் வரதச்சனையாய்
இருக்குமோ என்று ,,,
வரம் தேடும் வறியவர்கள்,,,
அஞ்சும் போதும்
என் நெஞ்சமும் உருகும் ,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }