வெள்ளையனும் தமிழ்வீரனும்
வெள்ளையனும் தமிழ்வீரனும்
வெள்ளைய துரை:
Where is my Tax. You should pay tax
தமிழ் வீரன்:
ஆ....ஆத்திரம் எழுகிறது,..
அடக்கமுடியவில்லை
அஞ்சி ஒதுங்கி நில்
அல்லேல் அறுபடும் உன் தலை.
என்னிடத்தில் ஏளனம் பேசும் ஈனனே
எண்ணி ஒன்று எண்ணும்முன்
எண்ணிக்கை இல்லா தலை உருளும் இங்கே
எச்சரிக்கை....
ஒட்டிப்பிழைக்க வந்த நீ
எட்டி உதைக்கப்பாற்கிறாயா,,,,!
முட்டிப் பெயர்ந்துவிடும் முக்காள் மூடனே.,,,,,.!
நிமிடம் போதுமடா உன்
நெற்றி பொட்டை நொருக்குவதற்கு.,
விறகு வெட்டும் எம்பெண்கள் கேட்டாள்
செருப்பு கொண்டு அடிப்பர் உன்னை.
கொட்டும் மழைக்கும்
கொளுத்தும் வெயிலுக்கும்
வீசும் காற்றிற்கும்
வீர மண்ணுக்கும்
கறைபடாத வானுக்கும்
கடமை செலுத்துகின்றோம், உமக்கேன்
கட்டுவது கப்பம்,...
பீரங்கியை முன்னனுப்பி
பீர்தண்ணியை உள்ளனுப்பி
போர் போர் என்று
போர்வைக்குள் பதுங்கும்
பெட்டிப்பாம்பே
பள்ளுடைந்து சொல்லொழிந்து
பல்லிமிட்டாய் சப்பியும்
புத்தி வரவில்லையா உனக்கு.
புலி வேடம் போர்த்திய
பூனையே!...
நரி வேடமிட்டு
நாயடிப்பட்டும் நன்னடத்தை தெரியவில்லையா? உனக்கு.
கைவலை பூண்ட எம்குலத்துக்
கன்னிப்பெண்களுக்கு,
பொய்வலை பின்னி பிழைக்கும்
உன் போன்ற
பொய்வளையில் தங்கும் ஓணான்களை
பிடிப்பதில்லை. ‘போய்விடு.....’
இல்லையேல்
‘இது போய் - வீடு.’
தமிழார்வத்தில் எழுதுகிறேன்
என்படைப்பில்
பிழை இருந்தால் மன்னிக்கவும்
தெரிவித்தால் திருத்திக்கொள்வேன்
என்றும் அன்புடன்
இவன்,
ர.சங்கர்