+எனக்கு ரொம்ப புடிச்சது+
(புகழ்பெற்ற ஒரு டைரக்டரை சந்திக்கிறார் ஒரு ரசிகர்)
ரசிகர்: டைரக்டர் சார்! உங்க படைப்புகளிலேயே எனக்கு ரொம்ப புடிச்சது..
டைரக்டர்: சொல்லுங்க சொல்லுங்க.. ஆஸ்கர் வரைக்கும் சென்ற என் முதல் படைப்பா.. தங்கத்தாமரை விருது பெற்ற என் இரண்டாவது படைப்பா.. இல்ல வசூல் சாதனை படைத்த என் மூன்றாவாது படைப்பு..
ரசிகர்: உங்கள் நான்காவது படைப்பு டைரக்டர்!
டைரக்டர்: நான் இதுவரைக்கும் மூணு படம் தானே எடுத்திருக்கேன்..
ரசிகர்: நான் என்னோட மனதை கொள்ளையடித்த உங்க நாலாவது பொண்ணு மீராவை சொன்னேன் டைரக்டரே..!
டைரக்டர்: ?!??!??!