பேராசைப் பேய்கள்

பசுமையைப் பார்ப்பதுவே
புதுமை
கண்களுக்கு விருந்தளிக்கும்
குளுமை
பாழாய்ப் போனவர்கள்
பேராசைப் பேய்கள்
விளைநிலத்தை எல்லாம்
விலையாக்கிக்
கொள்ளை அடிக்கிறார்கள்
கோடிகோடியாய்.
விலைவாசி ஏறினாலும்
பரவாயில்லை.
புதுப்புது நோய்கள் வந்தாலும்
கவலையில்லை.
இயற்கையை அழிப்பதே
குறிக்கோள்!
கொள்ளை லாபம் ஈட்டுவதே
லட்சியம்!
இறைவனே நேரில்
வந்தாலும்
அவனுக்கும் கையூட்டுக்
கொடுத்து
கெடுத்து விட்டு ஆர்ப்பரிப்பர்.
கடைசியில் எல்லாம்
அவன் செயல் என்பார்கள்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (2-Jan-14, 8:08 pm)
பார்வை : 470

மேலே